நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே தனது தோட்டத்துக்கு வெண்டைக்காய் பறிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக மாவட்ட நிர்வாகியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தெற்கு கும்பிளம்பாடு பகுதியை சேர்ந்த செல்வகுமார், நெல்லை தெற்கு மாவட்ட பாஜக ஊடக பிரிவு தலைவராக இருந்து வருகிறார்.சொந்த ஊரில் விவசாயம் செய்து வரும் செல்வகுமார், தனது தோட்டத்தில் காய்கறி பயிரிட்டுள்ள நிலையில், வெண்டைக்காய் பறிக்கும் பணிக்கு வந்த பெண்ணை தனியாக அழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார்.அவரிடம் இருந்து தப்பி வந்த பெண் ராதாபுரம் போலீசில் புகாரளித்தார். அதன் பேரில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான செல்வகுமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.