நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இளம்பெண் கொலை செய்யப்பட்டதை லவ் ஜிகாத் என சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார். ஊட்டி பென்னட் மார்க்கெட் பகுதியை சேர்ந்த இம்ரான் என்பவரின் மனைவியான ஆஷிகா பர்வீன், கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி அவரது மாமியார் யாஸ்மினால் காபியில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டார். பின்னர் நடந்த விசாரணையில் வரதட்சணை கொடுமையால் கொலை நடந்தது தெரியவந்தது. தற்போது இச்சம்பவத்தை லவ் ஜிகாத் என அவதூறு பரப்பிய விருதுநகரை சேர்ந்த பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினரான வெற்றிவேல் என்பவரை ஊட்டி போலீசார் கைது செய்தனர்.