தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்த நிலையில், உரிய அனுமதியின்றி செயல்பட்டதாக மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அடைக்கலப்பட்டினத்தில் உள்ள ஜிபிஎஸ் கிளினிக்கை மருத்துவர் சரவணக்குமார் நடத்தி வந்துள்ளார். இந்த மருத்துவமனையில், வேதம்புதூரை சேர்ந்த சுப்பம்மாள் என்பவர் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், அரசு அனுமதி பெறாமல் மருத்துவமனை இயங்கி வந்ததை கண்டுபிடித்தனர்.