கோவையில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதன் CCTV காட்சிகள் வெளியானது. குனியமுத்தூர் விஜயலட்சுமி மில்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க நீண்ட நேரம் காத்திருந்த பெண், அதிவேகமாக சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் பக்கவாட்டில் மோதியது.