ராமநாதபுரம் மாலங்குடி கிராமத்தில் பெண்ணின் கன்னத்தில் பெண் ஆய்வாளர் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலட்சுமி என்பவர் கணவரின் தந்தைக்கு சொந்தமான நிலத்தில் நெல் பயிரிட்டு அறுவடை செய்தார். இந்நிலம் தொடர்பாக கணவரின் சகோதரனுக்கும், அப்பெண்ணிற்கும் ஏற்பட்ட தகராறு குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் ஏர்வாடி போலீசார் விசாரணைக்காக சென்றனர். அப்போது, பெண்ணின் கன்னத்தில் காவல் ஆய்வாளர் ஜான்சி ராணி அறைந்ததுடன் உடனிருந்த போலீசாரும் அவரது மகனின் மீதும் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இது தொடர்பாக அப்பெண் எஸ்.பியிடம் புகார் அளித்தார்.