திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மின் இணைப்பு பெற வீட்டு வரி ரசீது கேட்டு ஒன்றரை ஆண்டுகளாக போராடுவதாக பெண் ஒருவர் வேதனையுடன் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. கொளமஞ்சனூர் கிராமத்தை சேர்ந்த குடும்பத்தினர், சாலை ஓரம் இருந்த தங்கள் வீட்டை நெடுஞ்சாலைத் துறையினர் இடித்து அகற்றியதால் வனப்பகுதி அருகில் உள்ள சொந்த பட்டா நிலத்தில் கொட்டகை அமைத்து வசித்து வருவதாகவும், மின் இணைப்பு பெற வீட்டு வரி ரசீது கேட்டு ஒன்றரை ஆண்டுகளாக நடையாக நடப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.