இருசக்கர வாகனத்தில் லிப்ட் கொடுப்பது போல் பெண்ணை அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த இருவருக்கு போலீசார் மாவு கட்டு போட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் 42 வயது மதிக்கத்தக்க பெண் கூலித் தொழிலாளியை இருவர் இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கொடுப்பது போல் அழைத்து சென்று ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இது தொடர்பான புகாரில் போலீசார் கைது செய்ய முற்பட்ட போது இருவரும் தப்பியோடியதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக ஒருவருக்கொருவர் கால் இடறி விழுந்ததில் பிரவீன் என்பவனுக்கு காலிலும், ராஜ்கபூர் என்பவனுக்கு கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.