அரியலூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழப்போன பெண்ணை ரயில்வே தலைமை காவலர் காப்பாற்றிய வீடியோ வெளியாகி உள்ளது. அரியலூர் ரயில் நிலையத்தில் விழுப்புரத்திலிருந்து- திருச்சி செல்லும் ரயில் கிளம்பியபோது இரண்டு பெண்கள் அதில் ஏறத் தொடங்கினர் . ஒருவர் உள்ளே சென்ற நிலையில், மற்றொருவர்இடது கையில் ரயிலின் கைப்பிடியை பிடித்து ஏற முயன்றபோது, நிலைதடுமாறி கீழே விழ சென்றார். இதனை கண்ட ரயில்வே தலைமை காவலர் செந்தில்குமார் நொடிப்பொழுதில் துரிதமாக செயல்பட்டு அவரை காப்பாற்றினார்.