விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. கன்னிசேரி புதூரில் சத்தியபிரபு என்பவரது பட்டாசு ஆலையில் கடந்த 5 ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் தொழிலாளி ஒருவர் நிகழ்விடத்திலேயே பலியான நிலையில், 5க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சைமன் டேனியல் என்பவர் கடந்த 9ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், தற்போது மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீரலட்சுமி என்ற பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.