விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே, புறம்போக்கு நிலத்தில் இருந்த பெண்ணின் குடிசை வீட்டை, 108 ஆம்புலன்ஸ் ஊழியர் அழித்து சேதப்படுத்தியால் அப்பெண் குழந்தைகளுடன் தெருவில் நிர்கதியாக நிற்கிறார். சின்ன செவலை கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் தேன்மொழி என்பவர் குடிசை அமைத்து கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர் தென்னரசு என்பவர் தனது நிலத்தின் அருகே உள்ள புறம்போக்கு நிலம் தனக்கு சொந்தம் என தேன்மொழியின் குடிசை வீட்டை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.