திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பாதையில் காட்டெருமை வந்ததால், நிலைதடுமாறிய கார் சுமார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அடுக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் தனது தங்கையின் திருமண விழாவிற்கு வந்த காதலி தீபிகாவை அழைத்துக் கொண்டு சென்றபோது, எதிரே காட்டெருமை வந்ததால் காரை நிறுத்த முயற்சித்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் பின்னோக்கி சென்று பள்ளத்தில் கவிழ்ந்தது. பலத்த காயமடைந்த ராஜசேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.