திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வளர்ப்பு மாடு முட்டியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பூமலூர் பகுதியை சேர்ந்த மணி என்பவர் தான் வளர்த்து வரும் மாடுகளை மேய்ச்சலுக்காக வயல்வெளியில் கட்டிவிட்டு வெளியே சென்ற நிலையில், சிறிது நேரம் கழித்து அவரது மனைவி சாந்தி மாட்டை இடம் மாற்றி கட்ட சென்றதாக கூறப்படுகிறது.அப்போது மாடு முட்டியதில் படுகாயம் அடைந்த சாந்தி நிகழ்விடத்திலேயே உயிர் இழந்தார்.அங்கும் இங்கும் சுற்றி திரிந்து அனைவரையும் அச்சுறுத்திய மாட்டை போராடி ஊர் மக்கள் பிடித்த நிலையில், போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.