திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் இட பிரச்சனைக் காரணமாக பக்கத்து வீட்டுக்காரர்கள் தகாத வார்த்தையில் திட்டியதால் மனமுடைந்த பெண், தனது மகனுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக சுரேஷ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.