சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறையினரை கண்டித்து பெண் ஒருவர் தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த சரண்யா என்பவருடைய சகோதரர் சந்துரு என்பவர் மீது போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்து அடித்து துன்புறுத்துவதாக புகார் தெரிவித்தார்.