முதுமலை வனப்பகுதியில் ஓவியத்தால் வரையப்பட்ட யானையை கண்டு, திடீரென அச்சமடைந்த காட்டு யானை, பின்பு தடவிக் கொடுத்தது, ரசிக்க வைத்தது. நீலகிரி மாவட்டம், மசினகுடியில் இருந்து முதுமலை செல்லக் கூடிய சாலையில் சோதனைச் சாவடி உள்ளது. இன்று, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை மெதுவாக சாலையை கடந்தது. அப்போது சுவற்றில் வரையப்பட்ட யானையின் அருகே காட்டு யானை சென்றபோது, உண்மையான யானை இருப்பதென நினைத்து அச்சமடைந்தது. அப்போது, இரண்டடி பின்னே வந்த காட்டு யானை துதிக்கையால் சுவற்றில் வரையப்பட்ட யானைகளை தொட்டுப் பார்த்து விளையாடிய காட்சி ரசிக்க வைத்தது. காட்டு யானையின் இந்த செயலை அச்சாலை வழியாக பயணித்த ஏராளமானோர் கண்டு ரசித்தனர். குழந்தை மனசுங்க...