கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே 3 நாட்களாக ஒற்றை யானை ஆக்ரோஷமாக சுற்றித் திரிவதால் பொது மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 3 நாட்களுக்கு முன்பு ஆந்திரா மாநில வனப்பகுதியிலிருந்து தமிழக எல்லையான மகாராஜா வனப்பகுதிக்கு வந்த காட்டுயானை கொங்கனப்பள்ளி, எப்ரி வனப்பகுதியில் முகாமிட்டு வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் கொங்கனப்பள்ளி, சிகரமாகனப்பள்ளி, எப்ரி, சிங்கிரிபள்ளி, நேர்லகிரி, கங்கமடுகு, பதிமடுகு, கட்டாயம்பேடு கிராமங்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.