நீலகிரி மாவட்டம் நெலாக்கோட்டை பகுதியில் உள்ள மைதானத்தில் நுழைந்த காட்டு யானையால், அங்கு விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர். கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள ஓவேலி, பந்தலூர், அய்யங்கொல்லி, நெலாக்கோட்டை, பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. இரவு நேரங்கள் மட்டுமல்லாமல் பகல் நேரங்களிலும் காட்டு யானைகள் உலா வருவதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.