திருப்பூர் மாவட்டம் உடுமலை - மூணாறு சாலையில் காட்டு யானையிடம் இருந்து சுற்றுலா பயணி உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.உடுமலை - மூணாறு சாலையில் புங்கன் ஓடை பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் ஒன்று சாலையை கடக்க முயன்றது. அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற சுற்றுலா பயணி ஒருவர், ஹாரன் அடித்து யானைகளை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த யானை ஒன்று, அந்த சுற்றுலா பயணியை துரத்தவே, அவர் வாகனத்தை நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்தார்.