நீலகிரி மாவட்டம் சேரங்கோடு பகுதியில் 20 -க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தி அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சூறையாடிச் சென்ற காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையை கண்டித்து அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சேரங்கோடு பகுதியில் முகாமிட்டுள்ள புல்லட் ராஜா என்ற காட்டு யானை கடந்த இரண்டு நாட்களாக 10 க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து சேதப்படுத்திய நிலையில், நள்ளிரவு மீண்டும் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் எட்டுக்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து சேதப்படுத்தி உள்ளது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் காட்டு யானையை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.