ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த கும்டாபுரம் வனச்சாலையில் சென்ற அரசு பேருந்தை வழி மறித்து நின்ற காட்டு யானையால், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சற்று பீதி அடைந்தனர். சிறிது நேரம் கழித்து காட்டு யானை நகர்ந்ததால், ஓட்டுநர் பேருந்தை மெதுவாக ஒட்டிச் சென்றார். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக உள்ளன. தற்போது தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட கும்டாபுரம் சாலையில், கரும்பு லாரியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் யானை ஒன்று, அவ்ழியாக வரும் ஒவ்வொரு வாகனத்தையும் தொடர்ச்சியாக வழிமறித்து வருவதாக கூறப்படுகிறது.