கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அருகே நாரலப்பள்ளி கிராமத்தில், யானை தாக்கி விவசாயி உயிரிழந்த நிலையில், உடலை மீட்க முயன்ற போலீசாரிடம் உறவினர்களும், கிராம மக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைக்கூட்டம் கடந்த மூன்று ஆண்டுகளாக கிராமங்களில் சுற்றித் திரிவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாரலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த, 50 வயதான வேணுகோபால் என்பவர் அவருடைய தோட்டத்தில் இருந்தபோது ஒற்றை யானை தாக்கியது. யானைகளை விரட்டாத வனத்துறையை கண்டித்து, சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்ற கிராம மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதையும் பாருங்கள்... கிராம மக்கள் மறியல்