தொண்டாமுத்தூர் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றவரை ஒற்றை காட்டு யானை தாக்கி கொன்ற நிலையில், கழிப்பறை வசதி செய்து தரக்கோரி பழங்குடியின மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவை, தொண்டாமுத்தூர் அருகே உள்ள அட்டுக்கல் ஆதிவாசி காலனி பகுதியைச் சேர்ந்த தேவராஜை அங்கிருந்த ஒற்றைக் காட்டு யானை தாக்கியது.இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆவேசம் அடைந்த மக்கள், தங்களுக்கு கழிவறை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கோரி தொண்டாமுத்தூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்ததால் மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.