சென்னை பள்ளிக்கரணை பகுதியில் அடுத்தடுத்து ஆறு வீடுகளில் புகுந்து குடியிருப்பு வாசிகளை அச்சுறுத்திய மேற்கு வங்க இளைஞரை கம்பத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகர் பகுதியில் உள்ள வரிசையாக வீட்டிற்குள் புகுந்து அச்சுறுத்திய நபர், பெண் ஒருவர் தனியாக இருந்த வீட்டில் நுழைந்தபோது, அப்பெண் கூச்சலிட்டதைக் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அந்நபரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து நபரை அழைத்துச் சென்ற போலீசார், விசாரணை மேற்கொண்டதில் அந்நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது.