தலைநகர் டெல்லியில் தேசிய அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய வீரர்களுக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த போட்டியில் ஈரோட்டை சேர்ந்த 15 பேர் தங்கபதக்கத்தையும் மூவர் வெள்ளிப்பதக்கத்தையும் 20 பேர் வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.