செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். திண்டிவனத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்டவர்களுடன் சென்னை நோக்கி புறப்பட்ட வேன், மேல்மருத்துவர் அருகே முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்தவர்கள், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.