சென்னை அம்பத்தூர் கருக்கு பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளத்தில் இரு சக்கர வாகனம் விழுந்ததோடு, சரக்கு வேனும் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அம்பத்தூர் கருக்கு பிரதான சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டதை அறியாமல் அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் சென்றவர் நிலைதடுமாறி பள்ளத்துக்குள் விழுந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் வாகன ஓட்டியை மீட்ட நிலையில், அதைத் தொடர்ந்து சென்ற சரக்கு வேனின் பின் சக்கரம் பள்ளத்துக்குள் சிக்கிக் கொண்டது. இந்த இரு விபத்துக்களிலும் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில், போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.