திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கண்டெயினர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அசோக்நகர் பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் நத்தம் கணவாய்ப்பட்டி சாலையில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது அதி வேகமாக மோதியதில் இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டு பைக்கில் பயணித்த இளைஞர்களும் வீசப்பட்டு 2 பேர் அந்த இடத்திலே உயிரிழந்த நிலையில், ஒரு இளைஞர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.