திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நேதாஜிநகர் பகுதியை சேர்ந்த மணிகண்டனின் இரண்டரை வயது மகன்சர்வேஸ்வரன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக தண்ணீர் தொட்டியில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன குடும்பத்தினர் குழந்தையை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து வாணியம்பாடி நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.