நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தனது வீடு உள்ள பகுதியில் கழிவுநீர் வருவதை தடுக்க பக்கத்து வீட்டுகாரரிடம் கூறிய போது ஏற்பட்ட தகராறில் லாரி ஓட்டுநர் உயிரிழந்தார். தனது மகனை தாக்கியதை தட்டி கேட்ட லாரி ஓட்டுநரை கடப்பாறை, கட்டைகளால் தாக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.