ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த தலங்கையில் கரும்பு லோடு ஏற்றி வந்த லாரி கோயில் நுழைவாயில் மீது மோதி முழுவதும் சேதமடைந்த நிலையில், ஓட்டுநருக்கு கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிக பாரம் ஏற்றி வந்ததே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.