செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே சாலையை கடக்க முயன்ற பெண் மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காட்டாங்குளத்தூர் பகுதியை சார்ந்த பானு என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், இரணியம்மன் கோவில் பேருந்து நிலையத்தில் இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது லாரி மோதி பானு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த உறவினர்கள் கதறி அழுதனர். சாலையின் நடுவே முறையாக தடுப்பு அமைக்காமல் உள்ளதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.