குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே மரத் தடிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குலசேகரத்தில் இருந்து கோவில்பட்டிக்கு தடிகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி திருவட்டாறு அருகே வளைவில் திரும்பமுயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் பைக், கார்கள் மற்றும் சாலையோரம் இருந்த கடைகள் சேதமடைந்தன. விபத்தில் படுகாயம் அடைந்த லாரி ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.