திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் திருப்பத்தூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பழங்குடியினர் அணி சார்பாக நாளை பழங்குடி எழுச்சி மாநில மாநாடு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனை அறிந்த ஜவ்வாது மலை, புதூர் நாடு மலைவாழ் மக்கள் தாங்கள்தான் பழங்குடியினர் எனவும் பழங்குடியினர் அல்லாதவரை வைத்து மாநாடு நடத்த பாஜக சார்பில் நடைபெற்று வருவதாக கூறி புதூர் நாடு வழியாக திருப்பத்தூர் செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மலையாளி மற்றும் பழங்குடியினர் என்ற பெயரை பயன்படுத்தி மாநாடு நடத்தக்கூடாது மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்கள் எந்த சமூகத்தினர் சார்ந்தவர்களோ? அவர்களின் சமுதாயத்தின் பெயரில் மாநாடு நடத்திக் கொள்ளட்டும் என கோஷங்கள் எழுப்பினர். அதனைத் தொடர்ந்து போலியான நபர்களுக்கு மாவட்ட நிர்வாகம் போலி ஜாதி சான்றிதழ் வழங்கக்கூடாது எனவும் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. Related Link சோலையார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடும் வறட்சி