திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கனரக லாரியின் மீது விழுந்த மரத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி சென்ற கனரக லாரியானது திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் ஓரமாக நின்ற பெரிய அளவிலான மரம் ஒன்று திடீரென முறிந்து லாரியின் மீது விழுந்துள்ளது. இதில், அந்த கனரக லாரியின் முன்பகுதி பெரிய அளவில் சேதம் ஏற்பட்ட நிலையில், அந்த பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு,லாரியின் மீது விழுந்த மரக்கிளையை அப்புறப்படுத்தினர். இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.