கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காற்றாலை இயந்திரத்தை ஏற்றி சென்ற ட்ரெய்லர் லாரி விபத்தில் சிக்கியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் இருந்து 84 டன் எடை கொண்ட காற்றாலை இயந்திரத்தை தூத்துக்குடி நோக்கி ட்ரெய்லர் லாரியில் கொண்டு சென்ற போது மாவிடந்தல் பகுதியில் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது காற்றாலை இயந்திரம் கீழே விழுந்து சேதமடைந்தது.