குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவிற்கு விரதம் மேற்கொள்வதற்காக, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அண்ணா நகரில் அமைக்கப்பட்டிருந்த ஓலை கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. கொட்டகை முழுவதும் எரிந்து கருகிய நிலையில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 7 இருசக்கர வாகனங்களும் தீயில் கருகின.