அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், 2 மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கோட்டைக்காடு கிராமத்தில் இருந்த தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் சுற்றியுள்ள 2 மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் நடைபெற்று வரும் உயர்மட்ட பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.