கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ஸ்ரீ ஆண்டவர் செல்லியம்மன் கோயில் கோபுரம் கனமழை காரணமாக கலசத்துடன் இடிந்து விழுந்தது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனக் கூறப்படுகிறது. நள்ளிரவு நேரத்தில் கோபுரம் இடிந்து விழுந்த நிலையில், அப்போது ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.