திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் கருக்கு சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பிரதான சாலை மூடப்பட்டுள்ளது.கருக்கு சாலை வழியாக மாதங்குப்பம், புதூர், கள்ளிகுப்பம் என ஏராளமான பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கனக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த சாலையில் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி திடீரென பாதாள சாக்கடை குழாய் உடைந்து ராட்சத பள்ளம் ஏற்பட்டது.அதனால், ஒரு வாரத்திற்கு அப்பகுதியில் போக்குவரத்து முடக்கப்பட்டு சீர் செய்யும் பணி நடைபெற்று வந்தது.மேலும்,இந்த சம்பவம் நடைபெற்று 2 வாரங்களுக்குள் மீண்டும் அதே சாலையில் ,ஏற்கெனவே பள்ளம் விழுந்த இடத்திற்கு அருகே மீண்டும் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.