ராணிப்பேட்டை மாவட்டம் சந்தைமேடு பகுதியில் உள்ள பேனர் வைக்கும் குடோனில் திடீரென தீ பற்றியதால் பொருட்கள் முற்றிலுமாக எரிந்து சேதமானது. தகவலறிந்துவந்த தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து காரணமாக குடோனில் வைக்கப்பட்டிருந்த பேனர் மற்றும் டீஜேவுக்கு தேவையான பொருட்கள் முற்றிலுமாக தீயில் கருகியது.