காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகள் உள் நோயாளிகள் பிரிவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால், ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது. மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்ட நிலையில், தாய்மார்கள் பதறியடித்து குழந்தைகளை தூக்கிக்கொண்டு வெளியே ஓடினர். அப்போது, நோயாளியின் உறவினர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு மெயினை ஆப் செய்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.