காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே இந்தியன் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் கோப்புகள் அனைத்தும் சாம்பலாகாமல் தப்பின. பெருநகர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் திடீரென தீப்பற்றி எரிவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உத்தரமேரூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து விசாரணை செய்தபோது, வங்கியில் உள்ள ஏசியில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதும், மின்சாதன பொருட்கள் மற்றும் மின்சார வயர்கள் மட்டுமே எரிந்து நாசமானதும் தெரியவந்தது. இதையடுத்து, வங்கியில் இருந்த கோப்புகள் அணைத்தும் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றி வைக்கப்பட்டது.