கோவை மாவட்டம் பெருமாநல்லூர் அருகே சாலையில் சென்ற வேன் திடீரென தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம்-கொச்சி சாலையில் சென்று கொண்டிருந்த ஈச்சர் வேனில், எலக்ட்ரிக் சாட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்து அதன் ஓட்டுநர் உடனடியாக வெளியேறி உயிர் தப்பிய நிலையில், வேன் முற்றிலுமாக எரிந்து நாசமானது.