சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் கார், திடீரென தீப்பற்றி எரிந்ததையடுத்து தீயணைப்புத்துறையினர் விரைந்து தீயை அணைத்தனர். வளசரவாக்கத்தில் இருந்து மண்ணடி நோக்கிச் சென்ற Maruti Swift Dzire காரில் திடீரென புகை வந்ததையடுத்து, அதில் பயணித்த இருவரும் உடனடியாக இறங்கியதால் உயிர் பிழைத்தனர்.