தேனி அரசு பொறியியல் கல்லூரி விடுதி கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலசொக்கநாதபுரம் பகுதியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த மாணவர் விக்னேஷ், விடுதியின் கழிவறையில் ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார்.