நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் விவேகானந்தா மகளிர் மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு பி.பார்ம் படித்து வந்த மாணவி காவியதர்ஷினி கல்லூரி விடுதியின் 3 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். கல்லூரியில் சேர்ந்து இரண்டு நாட்களே ஆன நிலையில் மாணவி விபரீத முடிவு எடுத்தற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.