தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில், சாலைகளில் சென்ற நபர்களை வெறிநாய் விரட்டி விரட்டி கடித்ததில் பத்து நபர்கள் காயம் அடைந்தனர். இதில் நான்குபேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினர். கடையநல்லூர் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.