தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை வெறிநாய் துரத்தி சென்று கடித்து குதறிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கிருஷ்ணாபுரம் பகுதியில் நாயின் பிடியில் சிக்கிய சிறுவன் கூச்சலிட்டதை தொடர்ந்து, அங்கிருந்த ஒருவர் விரைந்து வந்து சிறுவனை மீட்டார்.