திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே பர்வதமலை அடிவாரத்தில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இரண்டு பெண்கள் உடல்களையும் தீயணைப்புத்துறையினர் மீட்டனர். சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த 18 பேர், பர்வதமலை மேல் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பினர். மலையடிவாரத்தில் ஓடையை கடக்க முயன்றபோது திடீரென வந்த காட்டாற்று வெள்ளத்தில் இந்திரா, சங்கதமிழ் ஆகியோர் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணியில், ஓடையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் இந்திராவின் உடலையும் அதற்கு பின் 5 மணி நேர தேடலில் சங்கதமிழ் என்பவரின் உடலையும் மீட்டனர்.