ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வருடத்திற்கு ஒருமுறை புரட்டாசி மாதத்தில் ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத திருவிழா நடைபெற்றது. 5 சகோதரர்களோடு பிறந்த சகோதரி, சகோதரர்களின் மனைவிகளால் துன்புறுத்தபட்டு கொலை செய்யப்பட்டதாகவும், அந்தப் பெண் மாயமாகி அம்மனாக மாறியதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது. இதனால் பெண்கள் கோவிலுக்கு செல்லக்கூடாது என கூறப்படுகிறது. அத்துடன் ஒருவாரத்திற்கு முன்பிலிருந்தே அந்த பகுதிக்கு பெண்கள் செல்வதில்லை. இந்நிலையில் ஆண்கள் ஒன்றிணைந்து பிடாரி அம்மனை பூஜித்து, கைக்குத்தல் அரிசி சாதம் செய்து, 28 செம்மறி கிடாய்களை வெட்டி சமைத்து அனைவருக்கும் பரிமாறி உண்டனர்.